இந்தியாவில் புலிகள் பேச்சுவார்த்தை நடத்த வீரமணி ஆதரவு
சென்னை:
நார்வே குழுவினருடன் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த அனுமத்திக்கலாம் என்றுதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு முயன்று வருகிறது. அதற்காகஇந்தியாவிடம் உதவியும் கோரியுள்ளது. இந்தியாவும் இவ்விஷயத்தில் இலங்கைக்கு உதவுவதாகக் கூறியுள்ளது.
நார்வே சமாதானக்குழுவும் இலங்கை-விடுதலைப்புலிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில்ஈடுபட்டு வருகிறது.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவில் உள்ள சென்னை, திருவனந்தபுரம், பேங்களூர் ஏதாவது ஒன்றில் நடத்தஅனுமதிக்குமாறு இந்திய அரசிடம் விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தமாகா தலைவர்களில் ஒருவரானஎஸ்.ஆர். பாலசுப்பிரமணியமும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியும் கூறியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியோ, மத்திய அரசு எடுக்கும் எந்த நிலையையும் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து வீரமணி நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கைப் பிரச்சினை விரைவில் தீருவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு உதவுவோம் என்று ஏற்கனவே மத்திய அரசும் அறிவித்துள்ளது.
அதன்படி விடுதலைப் புலிகள் தற்காலிகமாக இந்தியாவில் தங்கி, பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கலாம் என்றுஅவ்வறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications