ரீட்டா கற்பழிப்பு வழக்கு: முக்கிய சாட்சியை கொல்ல சதி
திருவண்ணாமலை:
ரீட்டா கற்பழிப்பு வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரை கடத்தி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
சென்னையை சேர்ந்த ரீட்டாவை சிறையில் வைத்து வார்டன்கள் கற்பழித்ததாக வழக்கு நடந்து வருகிறது. ரீட்டாசிறையில் கற்பழிக்கப்பட்ட போது, பக்கத்து அறையில் கைதியாக இருந்த ஏகாம்பரம் இந்த வழக்கின் முக்கியசாட்சியாக சேர்க்கப்பட்டார்.
ஏகாம்பரத்தின் சொந்த ஊர் செஞ்சி அருகேயுள்ள சக்கராபுரம். இவர் திருவண்ணாமலையில் பழம் வியாபாரம்செய்து வருகிறார். கடந்த 12ம் தேதி இரவு வியாபாரம் செய்வதற்கு கரும்பு வாங்குவதற்காக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திருவண்ணாமலை ரயில்வே கேட் அருகில் ஒரு வாகனத்தில் வந்தவர்கள் ஏகாம்பரத்தை வழிமறித்துகடத்திச் சென்றதாக தெரிகிறது. மறுநாள் 13ம் தேதி இரவு ஏகாம்பரம் சுய நினைவு இல்லாத நிலையில் தலை மற்றும்உடல் முழுக்க காயங்களுடன் செஞ்சி அருகில் உள்ள புதரில் கிடந்தார்.
அந்த வழியாக சென்ற ஒருவர் முனகியபடி கிடந்த ஏகாம்பரத்தை பார்த்தார். உடனடியாக சக்கராபுரத்தில் உள்ளஏகாம்பரத்தின் அக்கா வீட்டுக்கு தகவல் கொடுத்தார்.
ஏகாம்பரத்தை கடத்தி அடித்து துன்புறுத்திய கும்பல் அவர் வாயில் ஏதோ திரவத்தை ஊற்றி கட்டாயப்படுத்திகுடிக்க வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பின்னர் ஏகாம்பரம் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜிப்மருக்கு விரைந்து சென்று அவரிடம்விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications