For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலத்தில் 18 ஆண்டுகளுக்குப் பின் ரத்தம் சொட்ட கத்தி போடும் திருவிழா

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

நலிவடைந்து வரும் கைத்தறித் தொழிலை காப்பாற்ற ஆயிரக்கணக்கான சிறுவர்கள் ரத்தம் சொட்டச் சொட்டக் கத்திபோட்டு உடலை வருத்திக் கொண்ட சம்பவம் 18 ஆண்டுகளுக்கு பின் சேலத்தில் நடந்தது.

சேலம் அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை, அரிசிப்பாளையம், செவ்வாய்பேட்டை, குகை, ஓமலூர் மற்றும்இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் கைத்தறித் தொழில் தான் முக்கியமான தொழிலாக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இத்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளனர்.

இவர்களின் குலதெய்வம் சேலம் பொன்னம்மாப்பேட்டை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன். நலிவடைந்து வரும்தொழில் சிறந்து விளங்க அம்மனுக்கு இவர்கள் வேண்டினர்.

தொழில் நலிவடையும் போதெல்லாம் புராண கால சம்பவங்களை நினைவு கூர்வதுண்டு. அதன்படிதிருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனிடம் இருந்து தாமரை நூலை தேவல முனிவர் பெற்று வரும்போது அரக்கர்கள் நூலை அபகரிக்க முயன்றனர்.

அப்போது அரக்கர்களிடமிருந்து சிவபெருமான் நூலைக் காப்பாற்றினார். அந்த நூலில் இருந்து வண்ண ஆடைகள்நெய்து தேவர்களுக்கும், சிவனுக்கும் முனிவர் கொடுத்த போது, சந்தோஷமடைந்த சிவன் நந்திக் கொடியையும்,வாள் ஒன்றையும் பரிசாக அளித்தார்.

இன்றும் பக்தர்கள் கொடி மற்றும் வாள் ஏந்தி முன் சென்று அம்மனை வழிபடுவது வழக்கம். இவ்வாறு வாளேந்திசெல்லும் போது தீயசக்திகள் தடை செய்யும் என்பதால், அந்த தடையை நீக்க தேவாங்க சமூகத்தை சேர்ந்தவர்கள்கத்திகளாலும், வாள்களாலும் தங்களது உடலை வருத்தி தீய சக்திகளை விலகிச் செல்ல வைப்பர் என்பது மரபு.

நலிவடைந்து வரும் கைத்தறித் தொழிலை காப்பாற்ற கத்தி போட்டு வருத்திக் கொள்ளும் நிகழ்ச்சிஎப்போதாவதுதான் நடப்பது வழக்கம். இந்நிகழ்ச்சி நேற்று (திங்கட்கிழமை) சேலத்தில் நடந்தது. ஆயிரக்கணக்கானசிறுவர்கள் மற்றும் பெரியம்மாப்பேட்டை பகுதியில் ஊர்வலமாக சுற்றி வந்தனர்.

மஞ்சள் வேட்டியில் உடல் முழுவதும் மஞ்சள் பூசிய சிறுவர்கள் இரு கைகளிலும் கூர்மையான பளபளக்கும்கத்திகளுடன் ஆடி வந்தனர். பக்தி பரவசத்துடன் இந்த ஊர்வலத்தில் ரத்தம் சொட்டச் சொட்டக் கத்தி போட்டு வந்தசிறுவர்களின் ஆட்டம் மெய்சிலிர்க்க வைத்தது.

கடந்த 1984ம் ஆண்டுக்கு பின் 18 ஆண்டுகள் கழித்து கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X