வீரப்பனுக்கு மளிகைப் பொருட்கள் கொண்டு சென்றவர் கைது
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி என்று கருதப்படும் ரவி என்பவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள என்னமங்கலம் என்ற இடத்தில் அதிரடிப்போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுப்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சாக்கு மூட்டையுடன் சென்று கொண்டிருந்ததைபோலீசார் பார்த்தனர்.
அவரை நிறுத்தி சோதனை செய்தபோது சாக்கு மூட்டையில் 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் மசாலாப் பொருட்கள்,ஊதுபத்தி, தீப்பெட்டி போன்ற பொருட்கள் இருந்தன.
விசாரணையின் போது அந்த வாலிபர் பெயர் ரவி என்பது தெரிய வந்தது. இவர் வீரப்பனின் கூட்டாளி என்றுபோலீசார் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசனூர்-மைசூர் காட்டுப் பகுதியில் வீரப்பன் இருப்பதாக விசாரணையின் போது அந்த நபர் போலீசாரிடம்தெரிவித்துள்ளார். பின்னர் ரவி, ஆசனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications