திருவள்ளூர் அருகே காலரா நோய்க்கு சிறுவன் பலி
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் காலரா நோய் பரவியதில் ஒரு சிறுவன் பலியாகி உள்ளான்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் திடீரென்று காலரா நோய் பரவியுள்ளது. அதிலும் குறிப்பாக சோழவரம் என்றஊர் இந்த காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் 150 பேருக்கு திடீரென்று வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் சென்னைதண்டையார் பேட்டை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அவர்களுக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 12 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து போனான். இந்த மாவட்டத்தில் பெரும்பாலும்ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் இருந்து வந்து செங்கல் சூளைகளில் வேலை பார்ப்பவர்கள் தான் அதிக அளவில்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டத்திற்கு மருத்துவக்குழு விரைந்து சென்று முகாம்கள் அமைத்து மக்களுக்கு காலரா நோய் தடுப்பதுபற்றி விளக்கிக் கூறி வருகின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவசங்கரன் காலரா நோய் மேலும் பரவாமல் தடுக்கநடவடிக்கை எடுக்கும்படி மருத்துவக்குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பகுதியில் குடிநீரில் தொற்று நோய்க் கிருமி பரவி இருப்பதால் தான் காலரா நோய் பரவியுள்ளதாககண்டுபிடித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications