வாக்காளர் பட்டியலில் முறைகேடு இல்லை: தேர்தல் அதிகாரி
சென்னை:
ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியலில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அங்கு விசாரணை நடத்தியதேர்தல் அதிகாரியான கே.ஜே. ராவ் கூறி உள்ளார்.
தேர்தல் அதிகாரி ராவ் நடத்திய விசாரணையின்படி வாணியம்பாடி, சைதாப்பேட்டை தொகுதிகளுக்கானஇடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடக்கும் என்றுதேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், ஆண்டிப்பட்டியிலும் முறைகேடு நடந்துள்ளதால் அங்கும் தேர்தலைதள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்தன.
ஆனால் பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடக்கும் என்று முறையான அறிவிப்பை நேற்று(வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டதோடு, நேற்று முதல் வேட்பு மனுத் தாக்கலும் தொடங்கியது. இது தொடர்பாகராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, தேர்தல் கமிஷனுக்கு முழு திருப்திஅளிக்கிறது. அங்கு என்னை சுதந்திரமாக செயல்பட அதிகாரிகள் விடவில்லை என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளகுற்றச்சாட்டு உண்மையானதல்ல.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து குறிப்பிட்ட தகவல்களைதெரிவித்தனர். ஆனால் ஆண்டிப்பட்டியில் பொதுவான குற்றச்சாட்டுக்களைக் கூறினர்.
ஆண்டிப்பட்டியில் 16 கிராமங்களில் அதிகளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதில்இரண்டு கிராமங்களில் நான் நேரில் ஆய்வு நடத்துவதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனர்.
அதில் முறைகேடுகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. எனவே குறிப்பிட்டு புகார் கொடுத்தால் அதை பரிசீலிக்கதயாராகவே உள்ளோம். தற்போது அங்கு தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என்று ராவ் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications