ஆண்டிப்பட்டியில் குவியும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் குவிந்துகொண்டிருக்கிறார்கள்.
என்னதான் சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும்,ஆண்டிப்பட்டியில் மட்டும் நிச்சயம் தேர்தல் நடக்கும் என்று அதிமுகவினர் நம்பி விட்டனர் போலும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இத்தொகுதியில் ஏராளமான நலத்திட்டப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு விட்டன. மேலும் பல எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் தங்கள் தொகுதிக்காக ஒதுக்கப்பட்டபணத்தை ஆண்டிப்பட்டி தொகுதிக்காக வாரி இறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையே திமுக உள்பட பல எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஆண்டிப்பட்டியில் குவியத்தொடங்கியுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாகவே அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆண்டிப்பட்டியில் தேர்தல் பணிகளை இடைவிடாமல்மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 132 அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 132 பேருமே ஆண்டிப்பட்டிக்கு வந்துபிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களே வந்து குவிகிறார்கள் என்றால், அமைச்சர்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை.
ஜெயலலிதாவும் ஆண்டிப்பட்டிக்கு வந்து 5 நாள்கள் தங்கியிருந்து கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பார்என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்காக ஏற்கனவே ஒரு வீடு வெகுவேகமாகத் தயாராகிவருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications