அதிமுகவுடன் எந்த உறவும் இல்லை: பா.ஜ.க. தலைவர்கள் மறுப்பு
மதுரை:
அதிமுகவும், பாஜகவும் நெருங்கி வருவதாக வரும் செய்திகள் தவறானவை என பா.ஜ.கவின் மூத்த தேசியதலைவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பா.ஜ.க. தேசியச் செயலாளரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சருமான வெங்கய்யாநாயுடு மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த உறவும் இல்லை. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் திமுக தான்நீடிக்கிறது.
ஜெயலலிதா பொடோ சட்டத்தை ஆதரித்து அறிக்கை விட்டதாலேயே, அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் உறவுஇருப்பதாக கூறுகிறார்கள். அதிமுக அரசு தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டதால் தான் பொடோவுக்கு ஆதரவுதெரிவித்தது.
அதே போல தமிழக அரசின் செயல்பாட்டை நான் பாராட்டினால் இரு கட்சிகளும் நெருங்குவதாகக் கூறுகிறார்கள்.இது தவறு.
திருநாவுக்கரசுவின் எம்.ஜி.ஆர். அதிமுகவை பா.ஜ.கவில் இணைப்போம். வரும் பிப்ரவரி-1ம் தேதி நடக்கும்பா.ஜ.க. பொதுக் குழுக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
இரு கட்சிகளும் இணைவதால் தமிழகத்தில் பா.ஜ.க. பலம் பெரும்
தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் திருநாவுக்கரசு. அவரை பா.ஜ.க. உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளும். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து பிரதமர் தான் முடிவு செய்வார்.
தமிழகத்தில் 3வது அணி அமைக்கும் முயற்சிகள் தோல்வியடையும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த முயற்சிபலனளிக்காது. ஜெயலலிதாவுக்கு ஊழல் ராணி என்ற பட்டத்தைக் கொடுத்தவர்கள் இதே கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஆனால், தேர்தல் வந்தவுடன் அவருடன் போய் ஒட்டிக் கொண்டனர். முதலில் அவர்கள் ஒரு தெளிவானமுடிவுக்கு வர வேண்டும் என்றார் நாயுடு.
வசுந்தரா ராஜே:
அதே போல கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் மத்திய சிறுதொழில்துறைஅமைச்சருமான வசுந்தரா ராஜே சிந்தியா கூறுகையில்,
நான் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை.சிறுசேமிப்புத்துறை தொடர்பாகத் தான் பேசினேன் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications