திமுகவுக்கு தோல்வி பயம் என்கிறார் ஜெ.
சென்னை:
திமுகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால்தான் தேர்தலை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறதுஎன்று அதிமுக பொதுச் செயலாளரும் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளருமான ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னை முதலமைச்சராக ஆக விடக்கூடாது என்பதற்காகவே திமுகவும் மற்ற கட்சிளும் ஆண்டிப்பட்டியில்முறைகேடு நடந்துள்ளதாக தேர்தல் கமிஷனிடம் புகார் கூறி வருகின்றன.
நான் மக்கள் ஆசியுடன் ஆண்டிப்பட்டியில் அமோக வெற்றி பெறுவேன். திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் தொடர்ந்து ஆண்டிப்பட்டியில் முறைகேடு என்று கூறி அங்கு தேர்தலை நிறுத்த அக்கட்சிமுயற்சித்து வருகிறது.
மேலும் பல சதிகளைச் செய்து திமுக என் மீது வழக்குகளை போட்டது. ஆனால் நீதி தேவதையின் கண்கள் திறந்துநான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.
என்னைப் பிரச்சாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ள தொண்டர்கள் மட்டும் ஆண்டிப்பட்டிக்கு வந்தால்போதும். மற்றவர்கள் வர வேண்டாம். ஏனெனில் இது மக்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்றுஅவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தொண்டர்களுக்கு ஜெ. தரும் பரிசு:
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தலில் யார் அதிக வாக்குகளைக் கவருகிறார்களோ அந்தத் தொண்டர்களுக்குஜெயலலிதா பரிசுகள் வழங்கவுள்ளார் என்று பெரியகுளம் எம்.பியான டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தினகரன் பேசுகையில்,
இது எம்.ஜி.ஆர். வென்ற தொகுதி. அப்போது அவர் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தபோதிலும்,மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் ஆண்டிப்பட்டி மக்கள் எம்.ஜி.ஆரை தேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்பினர்.
அதேபோன்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கும் மக்கள் தேடித் தர வேண்டும். ஜெயலலிதாவை தேர்தலில்போட்டியிட விடாமல் செய்வதற்காக பல்வேறு அநீதியான நடவடிக்கைகளை கருணாநிதி எடுத்து வருகிறார்.ஆனால் இதையெல்லாம் மீறி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெறுவார்.
எந்த பூத்தில் அல்லது யூனியனில் அதிக வாக்குகள் அதிமுகவிற்குக் கிடைக்கிறதோ அந்த பூத் மற்றும் யூனியனைச்சேர்ந்தவர்களுக்கு ஜெயலலிதா சிறப்புப் பரிசுகளை வழங்குவார் என்றார் தினகரன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications