அழகிரி பிறந்தநாள்: அல்லோலப்படுகிறது மதுரை
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், தென் மாவட்ட திமுகவில் முக்கியப் புள்ளியாக விளங்குபவருமானமு.க.அழகிரியின் 51-வது பிறந்த நாள் விழா இன்று (புதன்கிழமை) மதுரையில் படு கோலாகலமாககொண்டாடப்படுகிறது.
அழகிரியின் 51-வது பிறந்த நாளையொட்டி முன்னாள் மேயர் குழந்தைவேலு தலைமையில் குழு அமைத்து பெரும்பொருட் செலவில் ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகரெங்கும் சாலைகளை மறிக்கும் வகையில் திமுக கொடிகள், அழகிரியின் கட் அவுட்கள், பேனர்கள்,தோரணங்கள், அலங்கார வளைவுகள் என மதுரையே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது.
திருமண மண்டபங்கள் நிறைந்த காமராஜர் சாலையில் உள்ள மிகப் பெரிய திருமண மண்டபம் ஒன்று வாடக்ைகுப்பிடிக்கப்பட்டுள்ளது. அங்குதான் பிறந்த நாள் விழாவிற்காக வரும் தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி தேர்தலில் திமுக வேட்பாளர் வைகை சேகருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக, அழகிரி பிறந்தநாளின்போது அவரை வாழ்த்த வருபவர்கள் வெறும் சால்வைகள், பொன்னாடைகளோடு நின்று விடாமல்பணமாகவும் அன்பளிப்புகளைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வழக்கமாக அழகிரியின் பிறந்த நாள் ஆடம்பரமாக கொண்டாடப்படும் போதெல்லாம் திமுக மேலிடம் எரிச்சலைக்காட்டும். ஆனால் இம்முறை ஆண்டிப்பட்டி தேர்தலில் அழகிரி காலை வாரி விட்டு விடாமல் இருக்க வேண்டுமேஎன்பதற்காக பச்சைக் கொடி காட்டி விட்டதாகத் தெரிகிறது.
பிறந்த நாள் ஏற்பாடுகளால் மதுரையே மிரண்டு கொண்டிருக்கையில், இதுபற்றிக் கவலைப்படாமல் இருக்கும்அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
எனது தலைவர் கருணாநிதி வழியில் தொடர்ந்து நடப்பேன். திமுகதான் எனது கட்சி. அதை பலப்படுத்துவதே எனதுநோக்கம்.
தென் மாவட்டங்களில் திமுகவை மிகப் பெரும் கட்சியாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தீவிரமாகப்பாடுபடுவேன். ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்று அழகிரி கூறினார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications