மாஜி எம்.எல்.ஏ. எங்கே? - பிப்.1ல் ரகசிய விசாரணை
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும் தற்போது திமுக உறுப்பினருமாகிய காணாமல் போன எம்.கே. பாலனைபோலீசார் கடத்தியது தொடர்பான மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 1ம் தேதி ரகசிய விசாரணைநடக்கவுள்ளது.
கடந்த டிசம்பர் 30ம் தேதி வாக்கிங் சென்ற பாலன், இதுவரை வீடு திரும்பவேயில்லை.
இதற்கிடையே அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் தமிழக போலீசார்தான் தன்னுடைய தந்தையைக்கடத்தியுள்ளதாக பாலனின் மகன் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை எதிர்த்து அதிமுக சார்பில் அக்கட்சி எம்.பியான திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
மணிமாறன் வழக்கை நேற்று நீதிபதி வெங்கடாச்சல மூர்த்தி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர்விசாரித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 1ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றையதினம் இந்த வழக்கின் விசாரணை ரகசியமாக நடத்தப்படும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதன்படி வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும்விசாரணையின்போது அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தன்னுடைய தந்தையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடமும் மணிமாறன் புகார்மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications