ஆண்டிப்பட்டியில் தினகரன் விறுவிறுப்பான பிரசாரம்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அம்மாவை(ஜெயலலிதாவை) குறைந்தது 1 லட்சம் வாக்குகள்வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து அனுப்புங்கள் என்று கூறி பெரியகுளம் எம்.பியான தினகரன் மக்களிடம்பிரசாரம் செய்தார்.
ஆண்டிப்பட்டி தேர்தல் களை கட்டத் தொடங்கி விட்டது.
தேர்தல் கமிஷனின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அதிமுகவினரின் தேர்தல் பிரசாரம் ஆடம்பரமானஅளவில் இல்லாவிட்டாலும், அதிமுகவினர் தேனீக்களைப் போல் படு சுறுசுறுப்பாகவே பிரசாரத்தில்இறங்கியுள்ளனர்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட சுப்புலாபுரம் என்ற இடத்தில் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு அவர் கிராமமக்களிடையே பேசுகையில் கூறியதாவது:
உங்கள் அன்புக்குரிய அம்மா இங்கு போட்டியிடுகிறார். அவரை நீங்கள் ஜெயிக்க வைக்கப் போவது உறுதி.ஆனால் குறைந்தபட்சம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை ஜெயிக்க வைக்க வேண்டும்.
அம்மா தேர்தலில் நிற்காமல் தடுப்பதற்கு திமுகவினர் கடுமையான முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால்அவை எதுவுமே பலிக்கப் போவதில்லை. அவர்களுக்கு படுதோல்வி நிச்சயம்.
பெரியகுளம் எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ஆண்டிப்பட்டிக்கு ரூ.7 லட்சம் ஒதுக்கியுள்ளேன். அதன் கீழ் பல்வேறுநலப் பணிகள் நடந்துள்ளன.
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கத்தமிழ்ச் செல்வன் தனது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து ரூ.1 லட்சம்ஒதுக்கியுள்ளார். நீண்ட கால கோரிக்கையான கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.100 கோடி செலவில் தொடங்கியுள்ளது.
திமுகவினர் வசம் இந்தத் தொகுதி இருந்தபோது இல்லாத பல வசதிகளை அதிமுக ஆட்சி செய்துள்ளது. இதைமறவாது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் தினகரன்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications