ஜான் பாண்டியன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கோரிய ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
சென்னை-அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய்க்கும், அவரது பங்குதாரர் முருகனுக்கும் இடையே ரூ.3.5லட்சம் பணத்தகராறு இருந்து வந்தது. இதில் முருகனுக்கு ஆதரவாக ஜான் பாண்டியன் தலையிட்டுள்ளார்.
இதையடுத்து அஜயையும், அவரது மேனேஜரையும் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டதோடு மேனேஜர் சுனிலைகத்தியால் குத்தியதாக ஜான் பாண்டியன் மீது அஜய் போலீசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக ஜான் பாண்டியனை கடந்த 20ம் தேதி சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைதுசெய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.
பிறகு ஜான் பாண்டியன் தனக்கு ஜாமீன் வழங்குமாறு சென்னை கூடுதல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். ஆனால் இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனால் எனக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் எனக்கு உடனடியாக ஜாமீன் கொடுக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மலை சுப்பிரமணியம், ஜான் பாண்டியன் ஏற்கனவே நிறைய கொலைவழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications