ஆண்டிப்பட்டியில் பிப்.16, 17ல் கருணாநிதி பிரசாரம்
சென்னை:
பிப்ரவரி மாதம் 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்களில் ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரசாரம் செய்ய திமுக தலைவர்கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக வைகை சேகர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
வைகை சேகரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்வது குறித்து சந்தேகம் இருந்தது. அவருக்கு மூட்டு வலிஇருப்பதால் தொடர்ந்து நின்றபடி பிரசாரம் செய்வது, பேசுவது சிரமம் என்பதால் அவர் வரமாட்டார் என்றுகூறப்பட்டது.
ஆனால் வைகை சேகருக்கு ஆதரவாக தான் பிரசாரம் செய்யப் போவதாக கருணாநிதி 2 நாட்களுக்கு முன்அறிவித்தார்.
அதன்படி பிப்ரவரி 16ம் தேதி அவர் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்கிறார். இதற்காக சிறப்பு வேன் ஒன்று தயார்செய்யப்பட்டுள்ளது. அந்த வேனில் அமர்ந்தவாறு அவர் தொகுதி முழுவதிலும் பிரசாரம் செய்கிறார்.
அவர் 17ம் தேதியே தனது பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார். தொகுதியில் ஒரு கிராமம் கூட விடாமல் அனைத்துப்பகுதியிலும் கருணாநிதி பிரசாரம் செய்யவுள்ளார்.
இதேபோல, திமுகவின் மற்றொரு முக்கியப் புள்ளியான சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினும் வைகைசேகரை ஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளார். பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் ஆண்டிப்பட்டி சென்று பிரசாரத்தில்ஈடுபடுகிறார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications