பாமகவினரிடமிருந்து மிரட்டல் கடிதம்: சிவகாமி புகார்
சென்னை:
பாமகவிலிருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக புகார் தந்த அக்கட்சியின் எம்.எல்.ஏவான சிவகாமிவின்சென்ட்டுக்கு போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
பாமக சார்பாக தாராபுரம் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகாமி வின்சென்ட், கடந்த சில நாட்களுக்கு முன்காணாமல் போனார்.
அவரை அதிமுக தலைமைச் செயலாளர் செங்கோட்டையன்தான் கடத்தியதாக பாமக போராட்டம் நடத்தியது.சிவகாமியை மீட்டுத் தரும்படி அப்போதைய ஆளுநர் ரங்கராஜனிடமும் புகார் செய்தது.
ஆனால் திடீரென நிருபர்கள் முன் தோன்றிய சிவகாமி, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தனக்கு பாமகவின்போக்கு பிடிக்காததால் இனிமேல் தனித்தே செயல்படப் போவதாகவும் கூறினார்.
இந்நிலையில் நேற்று அவருக்கு ஒரு கடிதம் வந்தது. பாமக செயல்பாடுகளைக் கண்டித்து பேசக் கூடாது என்று ஒருமிரட்டல் கடிதம் வந்தது. இந்த கடிதத்தை மதுரை மத்திய சிறையில் இருக்கும் பாமகவைச் சேர்ந்த ஹனீபா என்பவர்எழுதியுள்ளார்.
இந்த மிரட்டல் கடிதத்தை பாமக தான் அனுப்பியுள்ளது, எனவே எனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று தமிழகஅரசிடம் புகார் கொடுத்தார்.
இதன்படி அவருக்கு கூடுதல் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications