பிப்ரவரி 7 முதல் ஸ்டிரைக்: அரசு ஊழியர்கள் உறுதி
சென்னை:
அரசு ஊழியர் சங்கங்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை எந்தவிதமான தீர்வும் எடுக்கப்படாதநிலையில் முடிவடைந்ததால் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் வேலை நிறுத்தம் கட்டாயம் நடக்கும் என்று அவர்கள்கூறியுள்ளனர்.
நிதி நெருக்கடியை காரணம் காட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கான சில சலுகைகளை அரசு நிறுத்தி வைத்தது.இதனால் அதிருப்தி அடைந்த அரசு ஊழியர் சங்கங்கள் வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
இப்போராட்டத்துக்கு ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், போராட்டத்தைத்தவிர்ப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு சில அரசு ஊழியர் சங்கங்களை தலைமைச் செயலாளர் சங்கர்அழைத்திருந்தார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்கன்பிரதிநிதிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அரசின் சார்பில் நிதித்துறைச் செயலாளர்சந்தானம், பணியாளர் நலத்துறைச் செயலாளர் மெய்கண்ட தேவன் மற்றும் அரசு கூடுதல் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால் இரவு 7 மணி வரை நடந்த இப்பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. மேலும் பிப்ரவரி 7ம்தேதிக்கு முன்பாக ஏதாவது ஒரு நாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை என்றால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் எனபேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சில சங்கங்கள் அறிவித்தன.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications