"கருவறை முதல் கல்யாணம் வரை": பெண்களுக்கான புதிய 18 அம்சத் திட்டம்
புதுக்கோட்டை:
பெண்கள் கருவில் உருவாவது முதல் அவர்களது கல்யாணம் வரையிலான கால கட்டத்தில் பெண்களுக்குத்தேவையான உதவிகளை செய்யும் பொருட்டு புதிய 18 அம்சத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவுள்ளதாகமாநில சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கூறினார்.
புதுக்கோட்டையில் ஆய்வுக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது கூட்டத்தில் அவர் கூறியதாவது:
சமூக நலத்துறை மூலம் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இந்தக் குழுக்களில் 20 பெண்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவிக்கு ஏற்பாடுசெய்யப்படுகிறது.
தொட்டில் குழந்தைத் திட்டம் வந்த பிறகு பெண் குழந்தை பிறந்து விட்டதே என யாரும் கவலைப்படத்தேவையில்லை. அதைக் கொல்லவும் முயல வேண்டாம். அரசிடம் வழங்கி விட்டால் அதை அரசே பராமரித்து,வளர்த்து வரும்.
ஒரு பெண் கருவில் உருவாவது முதல் அந்தப் பெண்ணின் கல்யாணம் வரையிலான காலகட்டத்தில் அந்தக்குழந்தைக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யும் வகையில், புதிய 18 அம்சத் திட்டம் ஒன்றைதமிழக அரசு வகுத்து வருகிறது என்று வளர்மதி கூறினார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications