மாமூல் கொடுக்காத வியாபாரியை கத்தியுடன் விரட்டிய ரவுடி
சென்னை:
சென்னை தரமணி பஸ் நிலையப் பகுதியில் மாமூல் கொடுக்க மறுத்த வியாபாரியை ஓட ஓட விரட்டிய ஒரு ரவுடிபட்டாக் கத்தியால் வெட்ட முயன்றதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தரமணி பஸ் நிலையம் கருமாரி அம்மன் கோவில் பகுதியில் கடை வைத்திருப்பவர் சின்னத்துரை. இவரது கடையில்வேலை பார்த்து வருபவர் ஆறுமுகப் பாண்டியன்.
சில மாதங்களுக்கு முன்பு சின்னத்துரையின் கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த காளிராஜன், கிருஷ்ணமூர்த்திஆகியோர் மாமூல் கேட்டு வந்தனர்.
அவர்கள் அடிக்கடி வந்து மாமூல் கேட்டு வந்ததால் ஆத்திரமடைந்த சின்னத்துரை மற்றும் அப்பகுதி வியாபாரிகள்ஒன்று சேர்ந்து இருவரையும் அடித்து, உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் சில நாட்களிலேயே அவர்கள் இருவரும் விடுதலையாகி வந்து விட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) காலை காளிராஜன் வழக்கம்போல் சின்னத்துரை கடைக்கு வந்து மாமூல்கேட்டுள்ளார். ஆனால் சின்னத்துரை கொடுக்க மறுத்தார்.
இதையடுத்து தனது கையில் வைத்திருந்த பெரிய பட்டாக்கத்தியால் சின்னத்துரையை வெட்ட முயன்றுள்ளார்.சின்னத்துரை அதைத் தடுத்துள்ளார். அப்போது கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியன்,காளிராஜனைத் தடுக்க முயன்றார்.
இதையடுத்து ஆறுமுகப் பாண்டியனை தெருவில் ஓட ஓட பட்டாக்கத்தியால் காளிராஜன் விரட்டியதாகத் தெரிகிறது.இதையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் தரமணி, அம்பேத்கர் நகர், பெரியார் நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு தரமணி பஸ் நிலையப் பகுதியில் திரண்டனர். இதனால் அங்குபதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அப்பகுதிக்கு வேளச்சேரி போலீஸார் விரைந்து வந்தனர். வியாபாரிகளிடம் பேச்சு நடத்திய போலீஸார்உடனடியாக அவர்களைக் கலைந்து செல்லுமாறு கூறினர். இருப்பினும் காளிராஜன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் வரை போராடப் போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தரமணி வியாபாரிகள் நலச் சங்கப் பிரதிநிதிகளுடன் போலீசார் பேச்சு நடத்தி வருகின்றனர்.
வியாபாரிகள் குமுறல்:
தரமணி பகுதியில் ரவுடிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், ஆனால் போலீஸ் தரப்பில்எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு கடையாக வந்து 500 கொடு, 1,000 கொடு என ரவுடிகள் மிரட்டிப் பணம் பறிப்பது பல ஆண்டுகளாகநடந்து வருவதாகவும், இதுதொடர்பாக போலீஸாரிடம் முறையிட்டால் சரியான பதில் கிடைப்பதில்லை என்றும்வியாபாரிகள் குமுறலுடன் தெரிவித்தனர்.
இதுபோன்ற ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் கோருகின்றனர்.












Click it and Unblock the Notifications