புதுவையில் கரை ஒதுங்கிய கப்பல் உடையும் அபாயம்
பாண்டிச்சேரி:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக வீசிய பலத்த காற்று காரணமாகபாண்டிச்சேரி அருகே கரை ஒதுங்கிய கப்பல் உடையும் அபயாம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் தற்போது குமரிமுனைக்கும், இலங்கைக்கும் இடையேமையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டப் பகுதிகளில் கனமழையும், பலத்த காற்றும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பாண்டிச்சேரி துறைகத்திற்கு ரசாயானப் பொருட்களை எடுத்து வரும் சிறு கப்பல் ஒன்று பலத்தசூறாவளிக் காற்றில் சிக்கி புதுவைக் கரையில் ஒதுங்கியது.
இந்தக் கப்பலை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் தண்ணீர்மட்டம் உயர்ந்தால்தான் கப்பலை எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் 150 டன் ரசாயானப் பொருட்கள் இருப்பதாக தெரிகிறது. கப்பல் உடைந்தால் இவை அனைத்தும் கடலில்கொட்டி, கடல் நீர் மாசுபடும் அபாயம் உள்ளது என்பதால் கப்பலை பத்திரமாக எடுக்க தீவிர முயற்சி நடந்துவருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications