வண்டலூரில் சிங்கத்தைத் தேடும் பணி தீவிரம்
சென்னை:
வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் சிங்கத்தைத் (?) தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள கேளம்பாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற 2 பேர் சாலையில் சிங்கத்தைப் பார்த்ததாக மிருகக்காட்சி சாலை இயக்குனரிடம் தெரிவித்தனர்.
ஆனால் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களின் எண்ணிக்கை சரியாக இருந்தது. அதனால் கடந்த 10நாட்களுக்கும் மேலாக அந்த மிருகத்தைத் தேடும் பணியில் போலீசாரும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மிருகக்காட்சி சாலை காலவரையறை இன்றி மூடப்பட்டது.
இந்நிலையில் இந்த மிருகம் மான்கள் இருக்கும் பகுதியில் நடமாடுவதாக சில தடயங்கள் வனத்துறைஅதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன.
மான்கள் உலாவும் இடத்தில் 2 சாம்பார் ரக மான்கள் இறந்துக்கிடந்துள்ளன.
இந்த மான்கள் அந்த மிருகத்தால் தான் கொலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால்அந்தப்பகுதியில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது.
அந்த மிருகத்தை உயிருடனோ அல்லது பிணமாகவே விரைவில் பிடித்து விடுவோம் என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications