ஜெ. மீண்டும் முதல்வராகக் கோரி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
டெல்லி:
ஜெயலலிதா முதல்வரானது செல்லாது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றதத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
டான்சி வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதா கடந்த சட்டசபைத் தேர்தலில்போட்டியிட முடியவில்லை. ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதால், ஜெயலலிதா தமிழகமுதல்வரானார்.
ஆனால் அவர் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றிருப்பதால் அவருடைய முதல்வர் பதவி செல்லாது என்று என்றுகடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி ஜெயலலிதா பதவி இழந்து பன்னீர்செல்வம் முதல் அமைச்சரானார். ஜெயலலிதாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்த அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியும் தன்னுடைய பதவியை ராஜினாமாசெய்தார்.
இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக அனுமதிக்கக் கோரி வழக்கறிஞர்எஸ்.எஸ். சுப்பாராவ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அடுத்த 6 மாதங்களுக்கு ஜெயலலிதாவைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க அனுமதித்தால் அவர்சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ராவ் தன் மனுவில் கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.பி. பரூட்சா தலைமையிலானபெஞ்ச், அந்த மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications