ஆண்டிப்பட்டியில் கலவர அபாயம்: உளவுத்துறை எச்சரிக்கை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் கலவரத்தைத் தூண்டி தேர்தலை நிறுத்த சதி நடப்பதாக தமிழக அரசுக்கு உளவுத்துறைஎச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது.
ஆண்டிப்பட்டித் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றால் தான் முதல்வராக முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால்,அவருடைய வெற்றிக்காக அதிமுக முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் இந்தத் தேர்தலை நிறுத்துவதற்கான அனைத்து வழிகளிலும் திமுக உட்பட மற்றக் கட்சிகள் ஈடுபட்டுவருகின்றன. தேர்தல் ஆணையம் முதல் ஜனாதிபதி வரை தேர்தலை நிறுத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தும், அவர்கள் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனால் இறுதிக்கட்ட முயற்சியாக சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடஇருப்பதாக ஒரு தகவல் உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்தது. கலவரத்தைத் தூண்டி விட்டு தேர்தலை நிறுத்தஎதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என்று தமிழக அரசுக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது.
நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக மேலும் ஒரு சிறப்பு உளவுப்பிரிவுஆண்டிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை ஏற்படும் இடங்கள், சமூக விரோத கும்பல், பதட்டம் ஏற்படும் இடங்கள் போன்றவற்றை இந்தஉளவுத்துறைப் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பை வழங்கவும் போலீசாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications