குழந்தைகளுடன் சேலம் பேக்கரி அதிபர் தற்கொலை
சேலம்:
கடன் தொல்லையால் மனம் உடைந்த சேலம் பேக்கரிக் கடை அதிபர் தனது மகன் மற்றும் மகளுடன் தற்கொலைசெய்து கொண்டார்.
சேலம் தாதகாப்பட்டி, பங்களாத் தெருவைச் சேர்ந்த சரவணன் (45). இவரது மனைவி புஷ்பா (32). இவர்களுக்குசொர்ணா (16), ப்ரியா (12), கவுசிக் (11) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.
சரவணன் அந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பேக்கரிப் பொருட்களைத் தயாரித்து மொத்த வியாபாரம்செய்து வந்தார். இவரிடம் சரக்கு எடுத்தவர்கள் பணம் கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதனால் இவருக்கு ரூ.2லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
தொழிலை மேம்படுத்த கந்து வட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் மேலும் நஷ்டம் அடைந்தார். கடன்கொடுத்தவர்கள் பணம் கேட்டு இரவு பகல் பாராது அவரது வீட்டுக்கு சென்று திட்டியுள்ளனர்.
இதனால் அவர் மனம் வேதனையடைந்தது. இதனால் வீட்டிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு மகள் ப்ரியா, மகன் கவுசிக் ஆகியோருடன் பேக்கரிக்குச்சென்று குளிர்பானத்தில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து தானும் குடித்துள்ளார்.
அதன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே 3 பேரும் நுரை தள்ளி புஷ்பா மற்றும் சொர்ணா முன்னிலையில்உயிரிழந்தனர்.
தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை வெட்டிக் கொன்றவர் தற்கொலை:
இதற்கிடையே ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற ஒரு டிரைவர்தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னமொடச்சூரைச் சேர்ந்தவர் டிரைவர் ராஜன் (35). இவரது மனைவி முருகாயாள் (30). இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். ராஜனுக்கு சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது.
நேற்றிரவு வழக்கம் போல் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென அரிவாளால் தன்னுடையகழுத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது அலறல் சத்தம் கேட்டு எழுந்த மனைவியை வெறியோடுஅரிவாளால் வெட்டி னார்.
பின்னர் மீண்டும் தன்னைத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு பரிதாபமாக இறந்தார். முருகாயாள் ஈரோடுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications