விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கத் தடை: கருணாநிதி ஆவேசம்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்யச் செல்லும்போது திண்டுக்கல் விருந்தினர் மாளிகையில் தங்க எனக்குக்கொடுக்கப்பட்ட அனுமதியை தமிழக அரசு திடீரென வாபஸ் பெற்றுவிட்டது. இது குறித்து தேர்தல் கமிஷனிடம்முறையிட்டுள்ளேன் என கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
தேர்தல் பிரச்சாரத்துக்காக வரும் 16ம் தேதி ஆண்டிப்பட்டி செல்கிறேன். அப்போது திண்டுக்கல் அரசு விருந்தினர்மாளிகையில் தங்கியிருக்க அனுமதி கேட்டேன். அனுமதி தந்தார்கள். ஆனால், திடீரென அந்த அனுமதியைதிரும்பப் பெற்றுக் கொணடுவிட்டனர்.
இதனால் நான் அங்கு தங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.
அயோத்தி விஷயத்தில் நான் எனது நிலையில் இருந்து இறங்கி வந்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் சங்கரய்யா கூறியிருக்கிறார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலை சந்திக்க முடியாது என்று கூறி திரும்பி அனுப்பியவன் நான்.ஆனால், அவரைச் சந்தித்த ஜெயலலிதாவைக் கண்டிப்பதை விட்டுவிட்டு என்னைக் குறை கூறியிருக்கிறார்சங்கரய்யா. இது என் துரதிஷ்டம் தவிர வேறென்ன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை நீதிமன்றத் தீர்ப்பை ஏற்போம் என்று அறிவித்திருக்கிறோம்.அந்த நிலையில் இருந்து திமுக கொஞ்சம் கூட மாறாது. தே.ஜ. கூட்டணியை உருவாக்கும்போதே இதைச்சொன்னோம். கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளும் நீதிமன்றத் தீர்ப்பு என்ற நிலையைத் தான் ஆதரிக்கின்றன.மேலும் அயோத்தி தொடர்பாக தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்ப்போம் எனவும் தே.ஜ. கூட்டணியின்சட்ட-திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தான் நான் இப்போதும் சொல்கிறேன். விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்தசர்ச்சைக்கும் இடம் தர திமுக விரும்பவில்லை.
சர்ச்சைக்கு உட்படாத நிலத்தைத் தருவது குறித்து யோசிப்பதாகத் தான் வி.எச்.பியிடம் பிரதமர் கூறியிருக்கிறார்.யோசிக்கிறேன் என்று கூறி இருப்பது நிலத்தைத் தருகிறேன் என்று கூறியதாக அர்த்தமில்லை.
ஆண்டிப்பட்டியில் தேர்தல் விதிகளை திமுக மீறியதாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது மிகப் பெரியஜோக் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications