அம்மா வீட்டுக்குச் செல்லும் கண்ணப்பன்
சென்னை:
தனது மக்கள் தேசம் கட்சியை அதிமுகவில் இணைக்க முடிவு செய்துவிட்டதாக அதன் தலைவர் கண்ணப்பன்அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்து கொடிகட்டிப் பறந்தவர் கண்ணப்பன். ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்தபடியாக இவர் தான் அதிக செல்வாக்கோடுதிகழ்ந்தார்.
இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. ஆனால், அதிமுக தோற்றவுடன் அக் கட்சியில் இருந்தாலும்மிகவும் சைலன்டாக இருந்தார். பல்வேறு முன்னாள் அமைச்சர்களை வாட்டி எடுத்த திமுக அரசு இவரைஅவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை.
ஸ்டாலினை இவர் கண்டுகொண்டது தான் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. கடந்த தேர்தலில் தெருவுக்கொருஜாதிக் கட்சிகள் உருவானபோது தானும் தனது யாதவர் சமுதாயத்தினரின் ஓட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்மக்கள் தமிழ் தேசத்தை உருவாக்கினார்.
திமுகவோடு கூட்டணி வைத்து 5 சீட்களை வாங்கி அனைவரையும் மூக்கில் விரலை வைக்கச் செய்தார். அப்போதும்கூட தேர்தல் செலவு விஷயத்தில் நன்றாக கவனித்ததால் தான் 5 சீட்களை திமுக வாரி வழங்கியதாகவும்கூறப்பட்டது.
ஆனால், எல்லா ஜாதிக் கட்சிகளோடு சேர்ந்து இவரும் மண்ணைக் கவ்வினார்.
இதையடுத்து இனி தனிக் கட்சி அரசியலில் தனக்கு எதிர்காலம் ஏதும் இல்லை என்பதை உணர்ந்த இவர்உடனடியாக அம்மா வீட்டுக்கே சென்றுவிடத் திட்டமிட்டார்.
அமைச்சராக இருந்தபோது இவரது திறமைையை நேரில் பார்த்துள்ளதால் மீண்டும் சேர்த்துக் கொள்ள அதிமுகதலைமையும் இறங்கிவந்துவிட்டது. இதையடுத்து தனது கட்சியின் பொதுக் குழுவை இன்று கூட்டினார்கண்ணப்பன். சென்னையில் நடந்த அக் கூட்டத்தில் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட அவருக்கு பொதுக் குழுஅதிகாரம் தந்தது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கண்ணப்பன்,
மீண்டும் தாய்க் கழகத்தில் இணைய முடிவு செய்துவிட்டோம். இணைப்பு எப்போது நடக்கும் என்பதை இப்போதுகூற முடியாது. பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரே விடிவிளக்கு புரட்சித் தலைவி தான். எனவே, தான் அவரதுவழிகாட்டுதலின் கீழ் மீணடும் சென்றுவிட முடிவு செய்தேன்.
தமிழகத்தில் சமீபகாலமாக கட்சிகள் காணாமல் போவது அதிகரித்துவிட்டது.
தமிழக ராஜிவ் காங்கிரஸ் நடத்திக் கொண்டிருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அதைக் கலைத்துவிட்டு காங்கிரசோடுஐக்கியமானார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர். அதிமுக நடத்திக் கொண்டிருந்த திருநாவுக்கரசு அதை மூடிவிட்டு பா.ஜ.கவில் சேர்ந்தார்.
இப்போது மக்கள் தமிழ் தேசம் கதை முடிகிறது.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications