தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிமுக: திமுக புகார்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் அதிமுக தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக தேர்தல் பார்வாையாளரிடம் புகார் கடிதத்தை திமுககொடுத்துள்ளது.
ஆண்டிப்பட்டியில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அங்கு தேர்தல் விதிமுறைகளைமீறுவதாகவும் ஆரம்பத்திலிருந்தே அதிமுகவின் மீது திமுக தேர்தல் கமிஷன், ஜனாதிபதி ஆகியோருடன் திமுகபுகார் கூறிவந்தது.
இந்நிலையில், அதிமுக தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், அரசு இயந்திரங்கள் ஆண்டிப்பட்டியில்முறையின்றி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பார்வையாளர் எம்.கே. கண்ணாவிடம் புகார் கடிதம் ஒன்றைதிமுக தேர்தல் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)கொடுத்துள்ளார்.
இது குறித்து முத்துராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அதிமுக தேர்தல் விதிமுறைகளை மீறி வருகிறது. மேலும் அரசு இயந்திரங்கள்தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும்.
மேலும் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது அதிக அளவு கார்கள் பயன்படுத்தினார் என்று ஆளுங்கட்சியின்வற்புறுத்தலின் பேரில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கருணாநிதி பிரச்சாரம் செல்லும் பாதையில் வேண்டுமென்றே ஜெயலலிதாவும் பிரச்சாரம் செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேவையில்லாத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெருங்குளம், போடி, தேனி, கம்பம் போன்ற ஆண்டிப்பட்டியின் பக்கத்துத் தொகுதிகளில் இருந்துதேர்தலின்போது கள்ள வோட்டு போட அதிமுகவினர் திட்டமிட்டிருக்கினர்.
இவையனைத்தையும் தேர்தல் பார்வையாளரிடம் கொடுத்த புகாரில் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று முத்துராமலிங்கம் கூறினார்.












Click it and Unblock the Notifications