கொல்கத்தா தாக்குதல்: 3 பாகிஸ்தானியர்கள் கைது
டெல்லி:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையம் தாக்கப்பட்டதில் முக்கியக் குற்றவாளியான அப்தாப் அன்சாரிபிடிபட்டுள்ள நிலையில், இதே வழக்கில் தொடர்புடைய 3 பாகிஸ்தானியர்களை டெல்லி போலீசார் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர்.
அன்சாரிக்கும் இந்த 3 பாகிஸ்தானியர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் டெல்லி போலீசார்தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இதே வழக்கில் கைதான வேறு 2 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஒரு வங்காளதேசத்தவர்ஆகியோர் கூறியதன் அடிப்படையில்தான் நேற்று இந்த 3 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த 6 பேருடைய தகவல்களைப் பற்றியும் தெரிவிக்க டெல்லி போலீசார்மறுத்துவிட்டனர். இவர்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில், மேலும் பல பேரைக் கைது செய்வதற்காகப்பல்வேறு மாநிலங்களுக்கும் டெல்லி போலீஸ் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அன்சாரி ஒப்புதல் வாக்குமூலம்:
இதற்கிடையே நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அன்சாரி, கொல்கத்தாவில் உள்ள அமெரிக்கமையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது தான்தான் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.
இது தவிர தனக்கு இந்தியா முழுவதும் பல்வேறு கடத்தல் புள்ளிகளுடன் தொடர்பு உள்ளதையும் அவன் ஒப்புக்கொண்டான்.
ஆள் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றின் மூலம் இதுவரை தான் ரூ.105 கோடிசம்பாதித்துள்ளதாகவும் அன்சாரி தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
செப்டம்பர் 11 தாக்குதலிலும் தொடர்பு:
இதற்கிடையே கடந்த செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டடங்களை கடத்தப்பட்டவிமானங்களின் மூலம் மோதி தாக்குதல் நடத்திய சம்பவத்திலும் அன்சாரிக்குத் தொடர்பு உள்ளது சி.பி.ஐ.விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தொழிலதிபர்களைக் கடத்தி அதன் மூலம் கிடைத்த ரூ.50 லட்ச ரூபாயைத்தான் நியூயார்க்கில்விமானத்தை மோதிய தீவிரவாதிகளிடம் அன்சாரி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை தவிர பாகிஸ்தானில் அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் கடத்தப்பட்டதில் முக்கியக் குற்றவாளியான ஷேக்ஒமருக்கும் அன்சாரிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பல்வேறு தீவிரவாதிகளுடனும் அன்சாரிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து கொண்டே உலகம் முழுவதும் அன்சாரி பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதும்தெரிய வந்துளளது. சி.பி.ஐ. போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications