ஆப்கான் அமைச்சரை அடித்துக் கொன்ற ஹஜ் பயணிகள்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

2 நாட்களாகியும் தாங்கள் செல்ல வேண்டிய விமானம் வராத காரணத்தால் ஆப்கானிஸ்தான் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சரான அப்துல் ரஹ்மானை நூற்றுக்கணக்கான ஹஜ் பயணிகள் அடித்துக்கொன்றனர்.

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு மெக்கா செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஹஜ்பயணிகள் விமானத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் 2 நாட்களாகியும் ஹஜ் பயணிகள் செல்வதற்கான விமானங்கள் எதுவும் வரவில்லை. இதனால் அவர்கள்ஆத்திரமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு (இந்திய நேரப்படி) டெல்லி செல்வதற்காக அப்துல் ரஹ்மான் காபூல்விமான நிலையத்திற்கு வந்தார். அவர்தான் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் என்பதைத் தெரிந்துகொண்ட நூற்றுக்கணக்கான ஹஜ் பயணிகள் அவரைச் சூழ்ந்து கொண்டு அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

ஹஜ் பயணிகளின் இந்தத் திடீர்த் தாக்குதலால் மிரண்டு போன ரஹ்மான், அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றார்.ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் அவரால் தப்பிக்க முடியவில்லை.

அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த அதிகாரிகளாலும் விமான நிலையப் போலீசாராலும் கூட இந்தத் தாக்குதலைத்தடுக்க முடியாமல் போயிற்று.

ஆனால் படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த ரஹ்மானைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு வழியாக மீட்டு,உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு ரஹ்மான் இறந்து விட்டார்.

இச்சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் புதிதாகப் பதவியேற்றுள்ள இடைக்கால அரசும் மக்களும்அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கிடையே காபூல் விமான நிலையத்திலிருந்த 890 ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு 2 விமானங்கள்மெக்காவுக்குப் பறந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+