நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கவில்லையாம்!!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

கடந்த டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதில் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டுள்ளதற்கானஎந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதையே கைவந்த கலையாக வைத்துக் கொண்டுள்ள முஷாரப், அமெரிக்காவில்தற்போது பயணம் மேற்கொண்டுள்ளபோதும் வழக்கம்போல குளறுபடியாகவே பேசி வருகிறார்.

ஆனால் முஷாரப்பின் இதுபோன்ற ஒவ்வொரு குளறுபடிப் பேச்சையும் அமெரிக்கா தொடர்ந்து நிராகரித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிருபர் கடத்தல் பற்றி குளறுபடி:

கராச்சியில் அமெரிக்க நிருபர் டேனியல் பேர்ல் கடத்தப்பட்டதில் இந்தியாவிற்குத் தொடர்பு உண்டு என்று முஷாரப்கூறியதைக் கேட்டு, அமெரிக்கா எரிச்சலடைந்தது. அதோடு நில்லாமல், டேனியல் கடத்தலில் இந்தியாவுக்குஎந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா உறுதியாகக் கூறிவிட்டது.

டேனியல் கடத்தல் தொடர்பாக கராச்சியில் தங்கியிருந்து லாகூருக்குத் தப்பியோடிய ஜெய்ஷ்-ஏ-முகமது என்றதீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஷேக் ஒமரைப் பாகிஸ்தான் போலீசார்தான் தற்போது கைது செய்துள்ளனர்.கடத்தப்பட்ட டேனியல் இறந்து விட்டதாகவும் ஷேக் ஒமர் கராச்சி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஷேக் ஒமர் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பாகவே அமெரிக்காவிலிருக்கும் முஷாரப் டேனியல் இறந்தது குறித்துமாற்றி மாற்றிக் கூறிக் கொண்டே இருந்ததையும் அமெரிக்க தலைவர்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்களேஎரிச்சலுடன்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

டேனியல் இறந்துவிட்டதாக ஒரு யூகத்தின் அடிப்படையில்தான் தான் கூறியதாகவும் முஷாரப் நேற்றுதெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத் தாக்குதலுக்கு ஆதாரமே இல்லையே:

இந்நிலையில் கடந்த 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தைத் தீவிரவாதிகள்தான் தாக்கினார்கள் என்பதற்கானஎந்தவிதமான ஆதாரமும் இல்லையே என்று முஷாரப் தற்போது கூறியுள்ளார்.

இது தொடர்பாக எந்தவிதமான ஆதாரத்தையும் நாங்கள் பெறவில்லை என்று கூறிய முஷாரப், இதைக் காரணமாகக்கொண்டு இந்தியாதான் எல்லையில் படைகளைக் குவித்து போரைத் தூண்டி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய 5 தீவிரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் பாகிஸ்தானில்செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகள்தான் இந்தத்தாக்குதலுக்குக் காரணம் என்று இந்தியா ஏற்கனவே ஆதாரங்களுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறையும் அமெரிக்காவிடமிருந்து கரியை வாங்கித் தன் முகத்தில் முஷாரப் பூசிக் கொண்டுள்ளார்.முஷாரப்பின் இந்தப் புதிய குற்றச்சாட்டை அமெரிக்கா வன்மையாக மறுத்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் ஒரு தீவிரவாதச் செயல்தான் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான பில் ரீக்கர் நிருபர்களிடம் கூறினார்.

இந்தத் தீவிரவாதச் செயலை அமெரிக்கா ஏற்கனவே கண்டித்துள்ளது என்றும் இதனால் இந்திய மக்கள் எவ்வளவுபாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது என்றும் இதுபோன்ற தீவிரவாதச் செயல்களைஎதிர்த்துப் போராட வேண்டும் என்றும் ரீக்கர் மேலும் கூறினார்.

முஷாரப்பின் இந்தக் கருத்தை அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக் குழு ஆலோசகரான கோண்டொலீசா ரைசும்மறுத்துப் பேசியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சனையில் தலையிடவும் அமெரிக்கா மறுப்பு:

இதற்கிடையே காஷ்மீர் பிரச்சனையில் தலையிடவும் அமெரிக்கா மீண்டும் மறுத்துள்ளது.

வாஷிங்டனில் நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய முஷாரப், அமெரிக்கா மட்டுமே காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டுதீர்வு காண வழி செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து கேட்டுக் கொண்டால் மட்டுமேதலையிடுவோம் என்று தேசியப் பாதுகாப்புக் குழு ஆலோசகரான ரைஸ் கூறிவிட்டார்.

காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாட்டின் தலையீடே கூடாது என்பதில் இந்தியா இன்னும் உறுதியோடுதான் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை குறித்தேபேசப்படும் என்றும் இந்தியா ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளது.

முஷாரப்பின் அமெரிக்கப் பயணம் தோல்வி:

இதற்கிடையே முஷாரப் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

பாகிஸ்தான் கேட்டிருந்த எப்-16 போர் விமானங்களைத் தர அமெரிக்கா மறுத்துவிட்டதையடுத்து, முஷாரப்பின்இந்தப் பயணமே தோல்வியில் முடிவடைந்ததாகக் கருதப்படுகிறது.

எப்-16 ரக போர் விமானங்களைப் பாகிஸ்தானுக்குத் தருவதற்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் அமெரிக்காஅளிக்கவில்லை என்று தெரிகிறது.

ஏற்கனவே முஷாரப் இந்தியாவுக்கு எதிராக முஷாரப் கூறிய பல கருத்துக்களையும் அமெரிக்கா தொடர்ந்து மறுத்துவந்துள்ள நிலையில், எப்-16 போர் விமானங்களையும் பாகிஸ்தானுக்குத் தர மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+