வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு ஆயுத போலீஸ் பாதுகாப்பு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியின் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்த வாக்குப் பதிவுக் கருவிகள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படும் என்று முன்புகூறப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக ஆண்டிப்பட்டி அருகிலேயே உள்ள சிம்மராஜநாயக்கன்பட்டியில்வைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் வாக்குப் பெட்டிகள் பலத்த கண்காணிப்பின் கீழ்வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
போலீசார் தவிர திமுக, மதிமுக, அதிமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டுகளும் வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி வளாகத்திற்குள் உரிய அடையாள அட்டைகள் இல்லாத யாரும் நுழையமுடியாது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையும் இங்கு தான் நடைபெறவுள்ளது. 24ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைதொடங்கும். மொத்தம் 18 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும். முற்பகல் 11 மணிக்கெல்லாம் முடிவுதெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications