இலங்கை சிறையில் 12 தமிழக மீனவர்கள்: நாகை மீனவர்கள் ஸ்டிரைக்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்:

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்தமீனவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிப்பதற்காக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் சென்றனர்.

ஆனால் அவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 12 மீனவர்களையும்பிடித்துச் சென்றுவிட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 12 தமிழக மீனவர்களும் பின்னர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் கடந்த புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம்மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களையும் மீட்கக் கோரி அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.

இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் நாகப்பட்டினம் கடற்கரையில் வெறுமனே நின்று கொண்டிருக்கின்றன.

இதையடுத்து நாகப்பட்டினத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் மீன்கள் சப்ளை பாதிப்படைந்ததோடு,நாகப்பட்டின மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+