செங்கை அருகே நின்ற லாரி மீது வந்த லாரி மோதல்: 2 டிரைவர்களும் சாவு
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 2 லாரிகளின்டிரைவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு அருகே பழவேலி என்ற இடத்தில் ஒரு லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. லாரியின் டிரைவர்அதைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது சென்னை அருகே பாலாற்றிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மணல் ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 லாரிகளின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications