கற்பழித்த போலீசாரை அடையாளம் காட்டினார் ரீட்டா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செஞ்சி கிளைச் சிறையில் தன்னைக் கற்பழித்த காவல்துறையினரை அடையாள அணிவகுப்பில் அடையாளம்காட்டினார் ரீட்டா மேரி.
சென்னையைச் சேர்ந்தவர் ரீட்டா மேரி. இவரை விபச்சார வழக்கின் கீழ் போலீஸார் கைது செய்து செஞ்சி கிளைச்சிறையில் அடைத்தனர். அங்கு அவரை சிறைக் காவலர்கள் கற்பழித்து விட்டதாகப் புகார் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கிளைச் சிறையைச் சேர்ந்த 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். ரீட்டா மேரிக்குமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மத்திய சிறையில் அடையாள அணிவகுப்பு நடந்தது. இதற்காக ரீட்டா மேரியை மத்தியசிறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தன்னைக் கற்பழித்த போலீஸ்காரர்களை ரீட்டா மேரி அடையாளம்காட்டினார்.
அடையாளம் காட்டிய பிறகு மீண்டும் சென்னை பொது மருத்துவமனைக்கு ரீட்டா மேரி கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications