தமிழர்களை நட்டாற்றில் விட்டுவிட்டார் பிரபாகரன்: சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதன் மூலம் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன், தமிழர்களை நட்டாற்றில் விட்டு விட்டார் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் சுப்ரமணியசுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதன் மூலம்பிரபாகரன், தமிழ் மக்களுக்கு துரோகம் விளைவித்து விட்டார்.
ஈழ சுதந்திர போராட்டம் என்ற பெயரில் சுமார் 65,000 தமிழர்கள் இது வரை இறந்துள்ளனர். பிரபாகரன் தனதுசுயநலத்துக்காக இலங்கை அரசிடம் சரணடைந்து, தமிழர்களை நடு ஆற்றில் விட்டு விட்டார் என்று சுவாமிகூறினார்.












Click it and Unblock the Notifications