அமைச்சர்களின் பக்... பக்....
சென்னை:
தமிழகத்தின் 19-வது முதல்வராக புதன்கிழமை ஜெயலலிதா பதவியேற்கும்போது பல அமைச்சர்களின் தலை உருளும் என்று தெரிகிறது.
இப்போதுள்ள அமைச்சர்கள் கடந்த மே மாதம் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தான். வளர்மதிஜெபராஜ், துளசி வாண்டையார் ஆகியோருக்கு இடையில் கல்தா கொடுத்தார். மற்றவர்கள் அனைவரும் பன்னீர்செல்வத்தின்அமைச்சரவையில் தொடர்ந்தனர்.
ஆனால், இப்போது மீண்டும் பல அமைச்சர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.
பதவியிழப்பவர்களில் பலர் புதுமுக அமைச்சர்களாக இருப்பார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது.
அதேபோல, மூத்த அமைச்சர்களில் சிலரும் பதவியிழக்கக் கூடும் என்று தெரிகிறது. அவர்களில் முக்கியமானவர்களாக தம்பித்துரை,அன்வர் ராஜா, நைனார் நாகேந்திரன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
தம்பித்துரை மீதும், அன்வர் ராஜா மீதும் பலவிதமான புகார்கள் கூறப்பட்டுள்ளன. கட்சிக்காரர்களும் இவர்கள் மீது கடும் அதிருப்திதெரிவித்துள்ளனர்.
அதேபோல, போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினையைக் கையாண்ட விதம் குறித்து நைனார் நாகேந்திரன் மீது ஜெயலலிதா அதிருப்தியாகஉள்ளதாகக் கூறப்படுகிறது (இந்தப் பிரச்சினைக்கு அப்புறம்தான் தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு, பால், மின்சாரக் கட்டணங்கள்உயர்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது).
மேலும் காளிமுத்து அமைச்சர் பதவி கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதா கொடுப்பாரா என்பது தெரியவில்லை.
தென் மாவட்டங்களுக்கு இந்த முறை அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம். குறிப்பாக மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்தசிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம். ஆண்டிப்பட்டி தேர்தலின்போது இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்த பலர் கடுமையாகஉழைத்துள்ளனர்.
தேனி எம்.எல்.ஏ. கணேசன், போடி எம்.எல்.ஏ. ராமராஜ், மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.எல்.ஏ ராஜாங்கம் ஆகியோரது பெயர்கள்இதில் பலமாக அடிபடுகின்றன. இவர்களில் தேனி கணேசனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர்களில் பொன்னையன், ஜெயக்குமர், செம்மலை, சேடப்பட்டி துரைராஜ், வளர்மதி, சரோஜா உள்ளிட்ட சிலருக்கு நிச்சயம்மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, சென்னையில் திமுகவினரின்கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறைய வளர்மதி ஆற்றிய பங்கை ஜெயலலிதா இன்னும் மறக்கவில்லையாம். எனவே அவருக்கு கண்டிப்பாகபதவி நீடிக்குமாம். மற்ற யாருடைய பதவிக்கும் உத்தரவாதம் இல்லையாம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications