மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் கடுமையானவரிச்சுமைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட்டிற்கு முன் வழக்கமாக வெளியிடப்படும் பொருளாதார ஆய்வறிக்கை ஏற்கனவே நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக வரி விதிப்பில் ஏராளமான மாற்றங்கள், சிறுசேமிப்பு வட்டிகுறைப்பு, மானியம் மற்றும் சலுகைகள் குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று அந்தஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் கடுமையான வரி விதிப்புகள் இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் விவசாயத்திற்காக பலவிதமான சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஆண்டுக்கு சுமார்ரூ.70,000 கோடி உணவுப் பொருட்கள் சேதமடைவதால் இதற்கான புதிய பல திட்டங்களும்அறிவிக்கப்படவுள்ளன.
வங்கிகளில் வாராக் கடன்களை வசூலிக்கவும் அன்னியச் செலாவணியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கிடையே சர்வதேசப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக இறக்குமதி வரி 5 சதவீதம் வரைகுறைக்கப்படும் என்றும் தெரிகிறது. ஜவுளிகள் மற்றும் மோட்டார் வாகனப் பொருட்களுக்கும் வரி குறைக்கப்படும்என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications