மாமியார் உடைத்தால் மண் சட்டியா? - ஜெ.க்கு கருணாநிதி கேள்வி
சென்னை:
மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற பழமொழிக்கு இலக்காக ரயில்வேகட்டண உயர்வு சாதாரண மக்களைப் பாதிக்கும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
ரயில் கட்டண உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இதைவிமர்சிக்கும் வகையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் திமுக தலைவர் கருணாநிதிநிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் 2ம் வகுப்பு கட்டணம் ரூ.83லிருந்து ரூ.88 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வேஷன் இல்லாமல் போனால் திருச்சிக்கு வெறும் ரூ.48 மட்டுமே.
ரயில் கட்டணம் சாதாரண மக்களை பாதிக்கும் என்று சொல்லும் ஜெயலலிதா, சென்னையில் இருந்து திருச்சிக்குவிரைவு சாதாரண பஸ் கட்டணத்தை ரூ.81ல் இருந்து ரூ.104 ஆக உயர்த்தியுள்ளார். அதாவது ரூ.23 அதிகம்.இதற்கு ஜெயலலிதா என்ன சமாதானம் சொல்லப் போகிறார்?
மதுரைக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணத்தில் தற்போது ரூ.9 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பஸ்ஸில் ரூ.31அதிகப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொன்றாக சொல்லலாம்.
மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற பழமொழிக்கு இலக்காக ஜெயலலிதாஇந்த ரயில் கட்டண உயர்வு சாதாரண மக்களைப் பாதிக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்று கருணாநிதி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications