கணவரின் குடிவெறி: இரட்டைக் குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு அருகே கணவரின் குடிவெறியை பொறுக்க இயலாத மனைவி தனது 4 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு அரச்சலூர் அருகே உள்ள சத்திரகாட்டுவலசை கிராமத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (45). வீட்டில் தறிவைத்து காடா துணி தயார் செய்து விற்று வந்தார்.

இவருக்கு கோமதி (35) என்ற மனைவியும், அன்புக்கரசி (16), பேபி (14), இரட்டைக் குழந்தைகளான ராணி (11),லலிதா (11) என்ற 4 மகள்களும் இருந்தனர். சென்னியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் இரவுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவது இவரது வாடிக்கை.

இதனால் வீட்டு செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் தொழிலுக்காக வங்கியில்வாங்கிய கடனையும் செலுத்தவில்லை. இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது.ஆனாலும் அவர் குடிப்பழக்கத்தை விடவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை வழக்கம் போல் சென்னியப்பன் குடித்துவிட்டு போதையில் வந்துள்ளார். இதனால்கோபமடைந்த கோமதி அவரை திட்டியுள்ளார். ஆனால் அவர் எதையும் காதில் வாங்காமல் தூங்கி விட்டுகாலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

பலமுறை புத்தி கூறியும் குடிப்பழக்கத்தை விடாததால் கோமதி மனமுடைந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குவயலில் உயிர்க்கொல்லிக்காக பயன்படுத்தப்படும் சல்பாஸ் என்ற மாத்திரையை தேங்காய் துருவலில் கலந்து 4குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.

பிறகு அருகில் வசிப்பவர்கள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோமதி,பேபி, ராணி ஆகியோர் இறந்தனர். அன்புக்கரசி, லலிதா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+