கற்பழிப்பு வழக்கில் நீதிபதியின் சூப்பர் தீர்ப்பு
சென்னை:
கற்பழிப்பு வழக்கில் கீழ்கோர்ட்டில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அந்தத் தண்டனை போதாது என்று கூறிஅவர்களது தண்டனையை 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக உயர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. 17 வயதுப் பெண்ணான இவர், கடந்த 1990ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இசக்கியம்மன்கோவில் திருவிழாவைப் பார்க்கச் சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 10 இளைஞர்கள் அவரைவழிமறித்தனர். பின்னர் அவரை ஒரு வீட்டுக்கு தூக்கிச் சென்று கற்பழித்தனர்.
இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அனைத்துகுற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் 10 பேருக்கும் 5 ஆண்டு சிறைமற்றும் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தூத்துக்குடி தன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் 10 பேரும் மேல் முறையீடு செய்தனர். ஆனால், அங்கும் தண்டனைஉறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தங்களது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி 10 பேரில் 6 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த அப்பீல் மனு நீதிபதி கற்பக விநாயகம் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், இவர்களுக்கு 5 ஆண்டு தண்டைன தந்தது போதாது என்று கூறிய நீதிபதிஇவர்களைக் கடுமையாகக் தண்டிக்க வேண்டும் என்று கூறி இவர்களை 10 ஆண்டுகள் சிறையில் தள்ள உத்தரவிட்டார்.
தனது தீர்ப்பில் நீதிபதி கூறுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் தினத்தைக்கொண்டாடும் வேலையில் இதுபோன்ற செயல்களுக்காக நாம் வருத்தப்பட வேண்டும்.
கொலை செய்பவன் கூட, ஒருமுறை மட்டுமே கொலை செய்யப்பட்டவரை வருத்துகிறான். ஆனால் கற்பழிப்பவனோ, அந்தஅப்பாவிப் பெண்ணின் மனதை நிரந்தரமாக காயப்படுத்தி விடுகிறான். இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனையேவழங்கப்பட வேண்டும்
கற்பழிப்புக் குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையே 10 ஆண்டுதான். ஆனால், குற்றவாளிகளின் வயது கருதி அவர்களுக்கு 5ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கீழ் கோர்ட் கூறுவதை ஏற்க முடியாது.
குற்றவாளிகள் கொஞ்சம் கூட இரக்கமேயில்லாமல் அந்தப் பெண்ணை கும்பலாக சேர்ந்து மிருகங்கள் மாதிரி கற்பழித்துள்ளனர்.இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார் நீதிபதி கற்பக விநாயகம்.
தண்டனையிலிருந்து தப்புவதற்காக மனு செய்த இந்த 6 எருமை மாடுகளும் இப்போது கூடுதலான தண்டனையைப் பெற்றுநொந்து போயுள்ளன. அப்பீலுக்கு வராத மற்ற 4 மாடுகளும் 5 ஆண்டு சிறையில் இருக்கும்.












Click it and Unblock the Notifications