சென்னை திரும்பினார் சங்கராச்சாரியார்: 15ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை
சென்னை:
அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் கோவில் கட்டுவதற்கு வரும் 15ம் தேதி பூமி பூஜை நடைபெறும்என காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார்.
கடந்த 4 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு வி.எச்.பி, ராமஜென்ம பூமி அறக்கட்டளை, இஸ்லாமிய சட்ட வாரியம்,பாபர் மசூதிக் கமிட்டி ஆகிய அமைப்பினருடன் பேச்சு நடத்தினார்.
இதன் பின்னர் இன்று சென்னை திரும்பிய காஞ்சி சங்கராச்சாரியாருக்கு விமான நிலையத்தில் பல இஸ்லாமியஅமைப்புகள் சிறப்பான வரவேற்பளித்தன.
டெல்லியில் வி.எச்.பி. மற்றும் முஸ்லீம் சட்ட வாரியம் இடையே அவர் சமானதானப் பேச்சு நடத்தினார். கோவில்கட்ட பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தைத் தர முஸ்லீம்களை ஒப்புக் கொள்ள வைத்தார். அதே போல பாபர் மசூதிஇடிக்கப்பட்ட இடம் தொடர்பான விஷயத்தில் நீதிமன்றம் தரும் எந்தத் தீர்ப்பையும் ஏற்க வி.எச்.பியை பணியவைத்தார்.
இதையடுத்து பூமி பூஜை நடத்த பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தை வி.எச்.பியிடம் வழங்குமாறு பிரதமர்வாஜ்பாயிடம் கூறிய அவர் இன்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் இல.கணேசன் மற்றும் இஸ்லாமியஅமைப்பினர் வரவேற்பு அளித்தனர்.
அவரது வருகையையொட்டி ஏராளமான நிருபர்கள் விமான நிலையத்தில் கூடினர். நிருபர்களிடம் காஞ்சிசுவாமிகள் கூறியதாவது:நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்ட, பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத நிலத்தில் கோவில்கட்ட பூமி பூஜை நடத்த அனுமதி தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடமும், அயோத்தி நகராட்சியிடமும்கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி தருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இன்று மாலைக்குள்முடிவெடுக்கும்.
நிலத்தைத் தருவது தொடர்பாக இஸ்லாமிய சட்ட வாரியம் வரும் 10ம் தேதி தனது முடிவைத் தெரிவிக்கும். மற்றஅமைப்புகள் 13ம் தேதி தங்கள் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளன. எல்லோரும் நல்ல முடிவையேஅறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இதன் பின்னர் வரும் 15ம் தேதி அந்த இடத்தில் ஒரே ஒரு கல்லை மட்டும் வைத்து பூஜை நடத்தப்படும். இது ஒருஅடையாள பூஜை தான். பின்னர் இந்த நிலம் ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடம் கோவில் கட்டுவதற்காகஒப்படைக்கப்படும்.
இடத்தை கோவில் கட்ட ஒப்படைக்கும் முன் அது தொடர்பாக இஸ்லாமிய மதத்தினருடனும், அரசியல்கட்சிகளுனும் விவாதித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும்.
மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பாக எந்த அமைப்பும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது. இதில்நீதிமன்றம் எடுக்கும் முடிவு தான் இறுதியானது.
பூமி பூஜை அமைதியாக, மகிழ்ச்சியான சூழ்நிலையில் நடக்கும். மதத்தின் பெயரால் மனிதர்கள் மிருகங்களாகமாறிவிடக் கூடாது. எல்லா பிரச்சனைகளையும் பேசித் தான தீர்க்க வேண்டும்.
பத்திரிக்கைகள் பொறுப்புணர்வுடன் நடந்து பிரச்சனை தீர உதவும் செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும்.இதைச் செய்தாலே 50 சதவீத பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார் சுவாமிகள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications