குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்ய தமுமுக வலியுறுத்தல்
கோயம்புத்தூர்:
குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டு அவர்களுடைய பொருள்களும் சூறையாடப்பட்டதால்,அம்மாநில அரசைக் கலைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் (தமுமுக)வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி கே.ஆர். நாராயணனுக்கு தமுமுக எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டு அதன்தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை எரித்தவர்கள் மீது குஜராத் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது.
இச்சம்பவத்தில் 58 பேர் உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டது துரதிருஷ்டவசமானதாகும். இதை நாங்கள்வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆனால் அதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை குஜராத் அரசு தடுப்பதற்குத்தவறி விட்டது.
இதனால் அப்பாவி முஸ்லீகள் கண்மூடித்தனமாக இங்கு கொலை செய்யப்படவும் குஜராத் அரசே காரணமாகிவிட்டது. கலவரத்தின்போது முஸ்லீம்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதை குஜராத் அரசும் போலீசாரும்வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் நின்றனர்.
எனவே குஜராத் அரசை உடனடியாகக் கலைக்க உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு நாங்கள் கடிதம்எழுதியுள்ளோம் என்று ஜவாஹிருல்லா கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications