எம்.எல்.ஏ. அலுவலகம் மீது தாக்குதல்: கருணாநிதி திடீர் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து, இன்று(ஞாயிற்றுக்கிழமை) அந்த அலுவலகத்திலேயே கருணாநிதி திடீரென்று உண்ணாவிரதம் இருந்தார்.

சேப்பாக்கம் தொகுதியில் உள்ள கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் மீது நேற்று திடீரென்று யாரோ சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை இந்த அலுவலகத்திற்கு வந்த கருணாநிதி, தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துஅலுவலகத்திற்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்துபோலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவும் தான்உண்ணாவிரதம் இருப்பதாகக் கருணாநிதி கூறினார்.

இதையடுத்து சேப்பாக்கம் பகுதி மட்டுமல்லாமல் சென்னை மாநகரம் முழுவதுமே பரபரப்புக்குள்ளானது. சென்னைமுழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உடனடியாகக் கருணாநிதிக்குபோன் செய்து, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார்.

ஆனால் உண்ணாவிரதத்தைக் கைவிட கருணாநிதி மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம்தீவிரமானது.

இதையடுத்து கருணாநிதியின் அலுவலகத்திற்கு வடசென்னை போலீஸ் துணை கமிஷனர் சைலேந்திரபாபு விரைந்துவந்து, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டார்.

தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைலேந்திரபாபுஉறுதிமொழி கொடுத்தார். இதைத் தொடர்ந்து விஜயகுமார் மீண்டும் கருணாநிதிக்கு போன் செய்துஉண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்தே கருணாநிதி தன்னுடைய உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம்கருணாநிதி கூறியதாவது:

ஒரு எம்.எல்.ஏவின் அலுவலகமே இவ்வாறு கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டால், சாதாரண குடிமகனின் கதிஎன்னவாகும்?

இதை "பிரேக்" செய்ய வேண்டும் என்பதற்காகவும் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாதுஎன்பதற்காகவும்தான் நான் உண்ணாவிரதம் இருந்தேன்.

தாக்குதல் நடத்திய உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதால்உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டேன் என்று கருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+