கருணாநிதி அலுவலகம் மீது தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் மீது சிலர் கல்வீசித் தாக்கி ஜன்னல்கண்ணாடிகளை உடைத்தனர்.
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவான கருணாநிதி தனது தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமைதான் எம்.எல்.ஏ.அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
திறந்து ஒரு நாளே ஆகியுள்ள நிலையில் அந்த அலுவலகம் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.கல்வீச்சில் அந்த அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இதுகுறித்துஅரசினர் தோட்ட காவல் நிலையத்தில் சேப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் சுரேஷ் குமார் புகார்கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications