பெரம்பலூருடன் இணைப்பை எதிர்த்து அரியலூரில் பந்த்
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர்மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) பந்த் நடைபெறுகிறது.
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது, பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர்மாவட்டம் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அரியலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்புவெளியானவுடனேயே அன்று அரியலூரில் உள்ள ஆட்டோ, டாக்சிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன.
மேலும் நேற்று அரியலூரில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அரியலூரில்போக்குவரத்தும் தடைபட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 6 மணிக்கே பந்த் தொடங்கி விட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடைபட்டுள்ளதால் அங்கு இயல்புவாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள்மூடப்பட்டிருந்தாலும், பிளஸ் டூ மாணவர்கள் எழுதும் பொதுத் தேர்வுகள் பாதிக்கப்படவில்லை.
பந்த்தையொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்றைய கடையடைப்பின்போது ஊர்வலம் செல்ல முயன்ற திமுக, பாமக மற்றும் தமாகாவைச் சேர்ந்த20 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications