அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாலசிங்கம்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கைக்கு செல்லத்திட்டமிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளில் நார்வே தூதுக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குமுன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் ஆலோசனை நடத்த ஏப்ரல் மாத இறுதியில் பாலசிங்கம்இலங்கைக்கு வர உள்ளார்.
இது குறித்து சண்டே லீடர் என்ற பத்திரிக்கைக்கு பாலசிங்கம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன் பிரபாகரனுடன் நான் கலந்து பேச வேண்டும். மேலும்ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் நானும் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்.
அநேகமாக ஏப்ரல் மாத இறுதியில் இலங்கைக்கு செல்வேன் என்று நினைக்கிறேன் என்று அந்த பத்திரிக்கைக்குபாலசிங்கம் பேட்டியளித்துள்ளார்.
ஆனால் அவருடைய பாதுகாப்பு கருதி அவர் எந்த தேதியில், எந்த வழியாக செல்கிறார் என்ற விவரத்தைகூறவில்லை.
பிரபாகரனையும், விடுதலைப்புலிகளின் மற்ற தலைவர்களையும் நார்வே நாட்டு பாதுகாப்புப்படையுடன்பாலசிங்கம் சந்திப்பார் என்று அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் பாலசிங்கம் பங்கு கொள்வது மிக முக்கியமானது என்று விடுதலைப்புலிகளும் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications