இமாம் அலியை பிடிக்க நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே அல் உம்மா தீவிரவாதிகளை அதிரடியாக மீட்டுச் சென்ற சம்பவத்தில் மேலும் 8 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அருகே திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் டாடா சுமோ காரில் வந்த சிலர், வெடிகுண்டுகளைவீசியும் துப்பாக்கியால் சுட்டும், இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகிய அல்-உம்மா தீவிரவாதிகளைக் கடத்திச்சென்றனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை மீட்டுச் செல்லப்பட்ட அல் உம்மா தீவிரவாதி ஹைதர் அலி உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடைசியாக ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் என்ற இடத்தில் செருப்புக் கடை சையதுஎன்று அழைக்கப்படும் சையது இப்ராகிம் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மீட்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும்7 பேர் பதுங்கியுள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து மதுரை தனிப்படை போலீஸார் திருநெல்வேலி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திருநெல்வேலி காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையில் போலீஸார் நெல்லைமாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு ஒரு வீட்டில் மறைந்திருந்த 7 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில்செங்கோட்டையில் பதுங்கியிருந்த ஒரு நபரை கைது செய்தனர்.
செங்கோட்டையில் பிடிபட்ட நபர், தீவிரவாதிகள் தப்பியோடியபோது, மதுரை கருப்பாயூரணி பகுதியில் போலீஸ்சப் இன்ஸ்பெக்டரைத் தாக்கியவர் என்று தெரிய வந்துள்ளது. சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து அவர் பறித்துச் சென்றவாக்கி டாக்கியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த 8 பேரிடம் விசாரணை செய்ததில் இமாம் அலி திருநெல்வேலியில் தான் பதுங்கியிருப்பதாக போலீசார்நம்புகின்றனர். இதனைத் தொடர்ந்து பனைக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ஹெலிகாப்டர் மூலம்போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications