தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு இலவச "லஞ்ச்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களில் பக்தர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் அன்னதானத் திட்டம்வரும் 23ம் தேதி துவங்குகிறது.
கோவில்களில் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டம் குறித்து ஆளுநர் உரையில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் கோவிலில் 23ம் தேதி பிற்பகல் இந்தத் திட்டத்தைமுதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
அதே நாளில், அதே நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள முக்கியக் கோவில்களில் அன்னதானத்திட்டத்தை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
நன்கொடைகள் மூலம் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 60க்கும்மேற்பட்ட முக்கியக் கோவில்களில் இந்த அன்னதானத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications