பெரம்பலூர்-அரியலூர் இணைப்பை எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டத்தை இணைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்மதிமுக பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டி. பாலூர் என்ற ஊரின் மதிமுக செயலாளரான கே. திருமாவளவன் தன்னுடையமனுவில் கூறியுள்ளதாவது:

திருச்சி மாவட்டம் கடந்த 1995லேயே திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.அப்போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு அரியலூரைத்தான் தலைநகரமாக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் 1997ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி அரியலூரில்25 அரசு அலுவலகங்களும் பெரம்பலூரில் 45 அலுவலகங்களும் செயல்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் அதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் கடந்த 1999 மே 16ம் தேதி அரியலூர் மாவட்டம் அமைக்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார்.அதன்படி பெரம்பலூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 2000 ஜனவரி 1ம் தேதி அரியலூர் மாவட்டம்உருவானது.

இதன் மூலம் அரியலூர் மக்களின் 16 ஆண்டு கால ஆசை நிறைவேறியது. ஆனால் தற்போது ஜெயலலிதாமுதல்வராகப் பதவியேற்ற பிறகு, பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டம் மீண்டும் இணைக்கப்படும்என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரியலூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் 5 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் அரியலூரிலோ 8 லட்சம் பேர் உள்ளனர். மேலும் அரியலூரில்ரயில் போக்குவரத்து வசதியும் தாராளமாக உள்ளது.

செலவைக் குறைக்க வேண்டுமென்றால் அரியலூர் மாவட்டத்துடன்தான் பெரம்பலூரை இணைக்க வேண்டும்.

எனவே அரசின் இந்த முடிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அம்மனுவில் திருமாவளவன் கூறியுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+