மருத்துவத் துறைக்கு தொடர்ந்து களங்கம்: விபச்சாரம் செய்த பெண் டாக்டர் கைது
சென்னை:
டாக்டர் தொழிலை விட விபச்சாரத்தை பெரிதாக கருதி அதை நடத்தி வந்த பெண் சித்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் டாக்டர் ஜானகி. அதே ஊரைச் சேர்ந்த டாக்டர் கெளரி சங்கருக்கும் அவருக்கும் சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சித்த மருத்துவம் படித்துள்ள ஜானகி, டாக்டராக பிராக்டிஸ் செய்யாமல் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.இந்த நிலையில், ஜானகியுடன் வாழப் பிடிக்காத கெளரி சங்கர், அவரை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மன வேதனை அடைந்து சென்னை வந்த ஜானகி, கோடம்பாக்கத்தில் ஒரு அழகு நிலையத்தைஆரம்பித்தார். ஆனால் பிசினஸ் சரியாக நடக்கவில்லை.
இதையடுத்து துணிச்சலுடன் அந்த விபரீதமான முடிவை எடுத்தார். விபச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்த ஜானகி,பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோராகப் பார்த்து தேர்வு செய்து தனது தொழிலை ஆரம்பித்தார்.
இந்தத் "தொழிலில்" நல்ல பணம் கிடைக்கத் தொடங்வே, அதன் பின்னர் தொழிலை விஸ்தரிக்க ஜானகி முடிவுசெய்தார். இதனால் தனது அழகு நிலையத்திற்கும் வரும் இளம் பெண்களுக்கு வலை விரித்தார்.
சொகுசாகவும் கை நிறையப் பணத்துடன் வாழ வேண்டுமானால் எனது பேச்சைக் கேளுங்கள் என்று ஆரம்பித்துசினிமா, டிவியில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் கூறி அவர்களை இழுத்தார்.
தனது வலையில் விழுந்த பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தினார். முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள்மற்றும் பணக்காரர்களின் கெஸ்ட் ஹவுஸ்களுக்கும் ஹோட்டல்களுக்கும் அந்தப் பெண்களை அனுப்பி வைத்தார்.
இதற்காக தொலைபேசி, செல்லுலார் போன் போன்றவற்றையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும்ஜாபர்கான்பேட்டை பகுதியில் பெரிய வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கும் இந்த தொழிலை நடத்திவந்தார்.
விபச்சாரத் தொழில் படு சுறுசுறுப்பாக நடந்து வந்ததால், அழகு நிலையத்தை மூடி விட்டார்.
இந்த நிலையில் ஜானகியின் தொழில் குறித்து போலீசாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து உதவி கமிஷனர்விஜயகுமார் தலைமையிலான போலீசார் ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஜானகியின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபச்சாரம் நடந்து வந்தது தெரிய வந்தது. கையும் களவுமாக ஒரு வாடிக்கையாளரும், விபச்சாரப்பெண்ணும் பிடிபட்டனர். இவர்கள் தவிர லட்சுமி, சுவாதி மற்றும் ஜோதி ஆகிய 3 விபச்சாரப் பெண்களும்பிடிபட்டனர்.
வாடிக்கையாளர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், சீனிவாசன் ஆகியோரும்பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் தங்கள் தவறுகளை அவர்கள் ஒத்துக்கொண்டதால் அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கட்டியதும் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
மருத்துவத்துக்கு தலைக் குனிவு:
செக்ஸ் ஊழல் தொடர்பாக டாக்டர் பிரகாஷ் முதலில் பிடிபட்டார். பின்னர் சமீபத்தில்தான் மருத்துவமனையில்சாதாரண நர்ஸாக பணியாற்றி, பெரிய அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நளினி என்பவர் பிடிபட்டார்.
இந்த நிலையில் மற்றொரு டாக்டர், அதுவும் பெண் டாக்டர் பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத் தொழிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் இவர்களால் மருத்துவத் துறைக்கேபெரும் தலைக் குனிவு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications