கல்பாக்கம் அணுமின் நிலையத்தை தகர்க்க அல்-கொய்தா சதி: பாதுகாப்பு தீவிரம்
கல்பாக்கம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தைத் தகர்க்க சர்வதேச தீவிரவாதி பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாதஇயக்கம் சதி செய்திருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள நரோரா அணுமின் நிலையம்,ராஜஸ்தானில் உள்ள ரவத்படா அணுமின் நிலையம், கர்நாடகத்தில் உள்ள கைகை அணுசக்தி நிலையம் மற்றும்கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய ஐந்தையுமே தகர்க்க அல்-கொய்தாவினர் சதித் திட்டம் தீட்டியுள்ளதைஅமெரிக்க புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏ. கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்க சிறைகளில் உள்ள சில அல்-கொய்தாவினரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போதுஇத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.
செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல், அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில்அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஆகியவற்றை மக்கள் மறந்து நிம்மதியாக உள்ள தற்போதைய சூழ்நிலையில்,அல்-கொய்தாவினர் இந்தத் திடீர் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்குப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரப்பகுதியைத்தான் தீவிரவாதிகள் குறி வைப்பார்கள் என்பதால், கடலோரத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில்தீவிரப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலோரக் காவற்படையும் உஷார்படுத்தப்பட்டு, கடல் வழியாக வரும் தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளும்படிகூறப்பட்டுள்ளது.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் மேலாக வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்படும். தவறிஅவ்வாறு பறந்தால் அந்த விமானங்களைச் சுட்டுத் தள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற அணுமின் நிலையங்களுக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அணுசக்தித் துறையின்ஐ.ஜியான ஜெ.டி. விர்கர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications